• Apr 10 2025

தங்கக் கடத்தலில் சிக்கிய கன்னட நடிகை...! பொலிசார் தீவிர விசாரணை!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகில் தனது திறமையால் பிரபலமாக உள்ள நடிகை ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரன்யா ராவ், கன்னடா மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நடிகை.


இவர் கெம்பேகவுடா விமான நிலையத்தில் துபாயிலிருந்து டெல்லி வழியாக பெங்களூருக்கு வந்திருந்தார். அதன்போது சட்ட விரோதமாக 14 கிலோ தங்கம் கொண்டு வந்ததாகக் கூறப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் சந்தேகத்திற்கிடமான பைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் அதில் 14 கிலோ தங்கம் இருந்ததாக  தெரியவந்ததுள்ளது. அத்துடன் இந்நடிகை மீது தங்கக் கடத்தல் தொடர்பாக வந்த குற்றச்சாட்டு, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்தத் தகவல் சமூக ஊடகங்களிலும் பரவி அனைத்து ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement