தமிழ் சினிமாவில் புது கூட்டணிகள் உருவாகும் போதெல்லாம், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தற்போதைய நிலைமையில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் மாஸ் இயக்குநர் அட்லி இணைந்து பணியாற்றப் போகிறார்கள் என்ற தகவல் பரவி வருகிறது. இது, தமிழ் திரையுலகில் பெரிய சர்ச்சையாகவும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும் மாறியுள்ளது.
இயக்குநர் அட்லி, தனது முன்னணி வெற்றிப் படங்களால் கோலிவுட்டின் மாஸ் இயக்குநராக மாறிவிட்டார். குறிப்பாக, அவரது படங்களான பிகில், மெர்சல், தெறி, ஜவான் போன்றவை வசூல் பட்டியலில் பெரும் சாதனை படைத்துள்ளன.
இந்நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது சிவகார்த்திகேயனின் திரையுலகில் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். மேலும் அட்லி, தனது இயக்கத்தில் மாஸ், சென்டிமெண்ட், ஆக்சன் மற்றும் குடும்பப்பாங்கான கதைகள் ஆகியவற்றை ஒருங்கே சேர்த்து பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர்.
மேலும் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர். அவரது படங்கள் வெகுவிரைவாக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து விடக்கூடியவை. ஆனால், அவருக்கு இன்னும் மணிரத்தினம், ஷங்கர், அட்லி போன்ற பெரிய இயக்குநர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வகையில் தற்பொழுது வெளியான தகவல் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!