• Oct 09 2025

சைபர் மோசடியில் சிக்கிய கன்னட நடிகர் உபேந்திரா..! ஷாக்கில் ரசிகர்கள்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையை பதித்துள்ளவர் கன்னட நடிகரும், இயக்குநருமான உபேந்திரா. சமீப காலமாக அரசியல், சமூக கருத்துகள், மற்றும் தன்னுடைய திரைப்படங்கள் ஊடாக அதிகளவான கவனத்தை பெற்றிருக்கும் இவர், தற்போது ஒரு பெரிய சைபர் மோசடியில் சிக்கியுள்ளார்.


உபேந்திரா மற்றும் மனைவியின் செல்போன்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக உபேந்திரா தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் அவரது ரசிகர்களை பெரிதும் உலுக்கியிருக்கிறது.


மேலும் உபேந்திரா, செல்போன்களில் இருந்து பணம் கேட்ட குறுந்தகவல்கள் யாருக்கும் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஹேக்கிங் சம்பவத்தின் பின்னணியில் ஒரு பெரிய மோசடி நபர்களின் சதி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement