• Jan 19 2025

ஹாஸ்பிடலில் அசிங்கப்பட்ட முத்து? மீனாவை அடிச்சு துரத்த இதுதான் நல்ல சான்ஸ்! பூமர் விஜயா செய்த காரியம்! அண்ணாமலையின் கண்டிஷன்!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

ஹாஸ்பிடலில் இருக்கும் சத்யாவை பார்ப்பதற்கு முத்து வரவில்லையா? என சீதாவும் மீனாவின் அம்மாவும் கேட்க, அவர் சவாரி போயிட்டார் என மீனா சொல்கிறார். மாப்பிள்ளை ஆறுதலாக வரட்டும் என்பது போல மீனாவின் அம்மா சொல்கிறார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த மீனாவிடம் அண்ணாமலை சத்யாவை பற்றி விசாரிக்க, அவன் காலேஜ் போகும்போது பைக்கில் இருந்து விழுந்ததாக மீனா சொல்கிறார். அதற்கு மனோஜ் என்ன திருட்டு பைக்கா என கேட்க, விஜயாவும் அதற்கு ஏற்போல பேசுகிறார்.

அதன் பிறகு அங்கு வந்த ரவியும், தம்பிக்கு என்னாச்சு என சத்யாவை பற்றி மீனாவிடம் விசாரித்துக் கொண்டிருக்க, முத்து வீட்டுக்குள் இருந்து வருகிறார் இதை பார்த்த மீனா அதிர்ச்சி அடைந்து என்னங்க, உங்களுக்கு போன் பண்ணினான் தானே.. சவாரி என்று சொன்னிங்க. இப்போ உள்ளே இருந்து வாரிங்க என கோபமாக பேசுகிறார்.


அதற்கு முத்து,  உன் தம்பி விழுந்தால் நான் எதுக்கு வரணும்? அவனுக்கெல்லாம் என்னால வர முடியாது அப்படின்னு திட்டுகிறார். உங்களுக்கு அன்பே கிடையாது பாசமே இல்லை அப்படி என்று மீனா ரொம்ப வருத்தப்பட்டு பேசுறாங்க.

இதை பார்த்த விஜயாவுக்கு அவ்வளவு ஒரு சந்தோஷம். இருவரும் சண்டை போடுவதை பார்த்து ரோகிணியும் சந்தோசப்படுகிறார். அப்படியே இதுதான் நல்ல சான்ஸ் மீனாவை அடிச்சு துரத்திடுவான் பாரு அப்படின்னு இருவரும் ரொம்ப சந்தோஷப்பட்டு இருக்காங்க.

அதன் பின்பும் நீங்க வருவீங்கன்னு எல்லாரும் நம்பி கொண்டு இருக்காங்க, ஏன் இப்படி பண்றீங்க என மீனா கேட்க,  முத்து கோபத்தில் சத்யா செய்த விஷயத்தை சொல்ல முனையவும்  சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

பிறகு, நீ போய் பாரு அப்படின்னு அண்ணாமைலை சொல்ல, சரியப்பா என்று சத்யாவை பார்க்க செல்கிறார் முத்து. அங்கு  சத்யாவை பார்க்க சென்ற முத்துவிடம் மிகவும் திமிராக கதைக்கிறார் சத்யா.

அந்த நேரத்தில் சத்யா, கைய உடைச்சிட்டு இப்போ பார்க்க  வாரீங்களா என்ற மாதிரி கேட்க, நீ பண்ண வேலைக்கு என்ன பண்ணுவாங்க என விஜயாவின் வீடியோ ஆதாரத்தை காட்டுகிறார். அதற்கு ஒன்றுமே பண்ணாதது போல ஆமா நான் தான் பண்ணினேன் என்ன சத்யா சொல்கிறார்.

அன்னைக்கு ஒரு நாள் உங்க அம்மா எனக்கு திருட்டு பட்டம் கட்டினாங்க. அதனாலதான் காசு திருடினான். இப்ப நீங்க என்ட கைய ஒடச்சிடீங்க.. இப்போ எல்லாத்துக்கும் காசு தான் ரொம்ப முக்கியம் அப்படி என்பது போல சத்யா பேசுகிறார்.

மேலும், உங்களுக்கு உங்க வீட்டுல மரியாதை இருக்கா? உங்க வீட்டிலேயே உங்களுக்கு மரியாதை இல்லை அப்படி என்று  முத்துவை கண்டபடி அசிங்கப்படுத்துகிறார் சத்யா. இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement