உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சொதப்பலுக்கு உள்ளானது. இந்த படத்தை இணையவாசிகளும் ட்ரோல் பண்ணி வருகின்றார்கள்.
இந்த நிலையில், இந்தியன் 2 படத்தினை 15 முறை தியேட்டரில் குடும்பத்துடன் பார்த்ததாக கமலின் தீவிர ரசிகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அவர் பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கோவிலுக்கு சென்றால் எப்படி மன அமைதி கிடைக்குமோ அதுபோல எனக்கு கமலஹாசனின் படங்களை தியேட்டரில் பார்த்தால்தான் அமைதி கிடைக்கும். குடும்பத்துடன் செல்வேன் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன் அவர்களுக்கு வர விருப்பமில்லை என்றால் தொந்தரவு செய்ய மாட்டேன். நான் கமலின் தீவிர ரசிகர் என்று கமலஹாசன் சாருக்கே தெரியும்.
விஸ்வரூபம் படத்தை 60 முறை பார்த்தேன். விக்ரம் படத்தை 51 முறை பார்த்தேன். விக்ரம் படம் ரிலீசான போது கமல சார் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது ஆனாலும் அதற்குள் வேறு பிரச்சனை வர கமல் சாரை சந்திக்க முடியாமல் போனது இதுவரை கமல் சாரை 5, 6 முறை சந்தித்துள்ளேன்.
ஒருமுறை நானும் எனது தம்பியும் அவருடன் புகைப்படம் எடுக்கச் சென்றோம். அப்போது அவருடைய கண்கள், உதடுகளைப் பார்த்து பயந்து விட்டோம். இந்தியன் 2 படம் மிகவும் சூப்பராக உள்ளது. படம் பிளாக் பாஸ்டர் என்று கூறமாட்டேன். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதே நேரத்தில் பார்த்தபோது படத்தில் எதுவுமே இல்லை. குப்பை என்று கூறும் அளவிற்கு மோசம் இல்லை.
இந்த படத்தை இரண்டாக பிரித்தது தான் பிரச்சனை. இந்த படத்திற்கு சங்கர் படத்தை வேறு பெயர் வைத்திருந்தால் ஓடி இருக்கும். இந்த படத்தை ஒரு முறை பார்த்தால் போதாதா என எனது அம்மா திட்டுவார். ஆனால் அவரும் ஒரு காலத்தில் என்னை புரிந்து கொண்டு விட்டார் என கூறியுள்ளார்.
Listen News!