உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், ஸ்ருதிஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒரு மாஸ் ப்ராஜெக்ட் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணையும் மியூசிக் வீடியோ குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த மியூசிக் வீடியோவை ராஜ்கமல்
பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகமே ஒரு மாயை, அதற்கு ஒரு தீர்வு காணப்படும் எந்த ஒரு விஷயம் கடினமாக தோன்றினாலும், அது அடிப்படையில் மிகவும் பாசிட்டிவாக இருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்த மியூசிக் வீடியோ அமைய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதளத்தில் இது குறித்த அறிவிப்பு புகைப்படத்துடன் வெளியாகி உள்ள நிலையில் இந்த மியூசிக் வீடியோவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Music video sung by Shruthi Hassan directed by Lokesh kanagaraj produced by rajkamal pic.twitter.com/su6KlgEXLp
Listen News!