• Nov 22 2024

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட விஷ்ணுவிஷால்... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்... தேவையா பாஸ் இதெல்லாம்...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஷ்ணு விஷாலின் சமீபத்திய ஒரு வீடியோ வைரலாகி வரும் நிலையில், அவரை வரிசையாக ரசிகர்கள் ட்ரோல் செய்யும் நிலை உருவாகி இருக்கிறது. அவர் பேசிய பேச்சுக்கள் தான் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய வேடம் ஏற்று இருக்கின்றனர். அவர்களுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் மொய்தீன் பாய் என்ற வேடத்தில் நடிக்கிறார். படத்துக்கு இப்போதே நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இந்த வார இறுதியில் படம் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என் அப்பா சங்கி இல்லை எனப் பேசி இருப்பார். அது ஒரு பக்கம் சர்ச்சையானது. சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்து மோசமாக பேசிய தன்யா பாலகிருஷ்ணன் ஒரு பக்கம் சர்ச்சையை கொண்டு வந்தார்.


இந்நிலையில் மேடையில் பேசிய விஷ்ணு விஷால் ஒரு விவகாரத்தினை தொடங்கி வைத்து இருக்கிறார். அவர் பேசும் போது, என் மகனுடைய அம்மாவுக்கு இந்த படத்தின் பேச்சுவார்த்தை இருக்கும் போது ரஜினிகாந்த் சார் கால் செய்து பேசி இருக்கிறார். ஐஸ்வர்யா ஒரு படம் இயக்குகிறார்.


அதில் விஷ்ணு நடிக்க இருக்கிறார். நானும் ஒரு கதாபாத்திரம் செய்ய இருக்கேன். உனக்கு எதுவும் இதில் பிரச்னை இல்லையே எனக் கேட்டாராம். இதை என் மகனின் அம்மா எனக்கு கால் செய்து சொன்னார் என மேடையில் பேசி இருப்பார். விஷ்ணுவின் முதல் மனைவி ரஜினி, பழம்பெரும் நடிகர் நட்ராஜின் மகள் என்பதும், நடிகர் ரஜினிக்கு அவர் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதாவது நண்பரின் மகள் இதில் எதுவும் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதை ரஜினிகாந்த் சார் மதித்ததாக விஷ்ணு பேச நினைத்தார். ஆனால் அதனை தன் முன்னாள் மனைவி எனக் குறிப்பிட விரும்பாமல் என் மகனின் அம்மா எனக் குறிப்பிட்டது தான் தற்போது விவகாரமான விஷயமாகி இருக்கிறது.

Advertisement

Advertisement