• Jan 18 2025

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலஹாசன் உறவு... தற்போதைய நிலவரம்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரரும் பிரபல நடிகருமான சாருஹாசன் தீபாவளியன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்போவதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், சாருஹாசன் உடன் மருத்துவமனையில் அவரது மகள் சுஹாசினி மணிரத்னம் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


93 வயதிலும் நல்லா ஆக்டிவாக இருந்து வந்த சாருஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  


சாருஹாசன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும், இயக்குநராகவும், நடிகராகவும் பல பரிமாணங்களை காட்டியுள்ளார். உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே,, தளபதி, ஜெய்ஹிந்த், தில், தமிழன், உத்தமப்புத்திரன் போன்ற பல  படங்களில் நடித்திருந்தார். 

d_i_a


தீபாவளிக்கு முந்தைய இரவு திடீரென எங்களுக்கு மிகப்பெரிய சங்கடம் ஏற்பட்டது. அப்பா சாருஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தோம். தீபாவளி முழுக்க இங்கேதான் கழிந்தது. ஆனால், அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்தால் அவர் குணமாகி விடுவார் என மருத்துவர்கள் கூறுகின்றனர் என சுஹாசினி பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement