2019-ம் ஆண்டு பரத்தில் நடிப்பில் வெளியாகி இருந்த காளிதாஸ் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்கிய இயக்குநர் செந்தில் ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படம், ஒரு சஸ்பென்ஸ் மிக்க கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது.
பரத்தைத் தொடர்ந்து, அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி, ராஜா ரவீந்தர் மற்றும் டி.எம். கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் முக்கியமான விடயம் , ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா, பல வருடங்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி தருகிறார். அதுவும், ஒரு அழுத்தமான கதாப்பாத்திரத்தில் அவர் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசை அமைப்பை சாம் சி. எஸ். மேற்கொண்டுள்ளார். திரைப்படத்தைக் பைவ் ஸ்டார் செந்தில், Sky Pictures Company மூலம் தயாரித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்து, ரிலீஸுக்கான இறுதி வேலைகள் நடந்து வருகின்றன. இதன் டீசர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மேலும் நடிகர் ரவி மோகன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் டீசரை வெளியிட்டுள்ளனர்.
Listen News!