• Oct 16 2024

2 குழந்தை பெத்த 45 வயது பெண்ணா இவர்? வேற லெவல் வொர்க் அவுட் வீடியோ வெளியிட்ட ஜோதிகா..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை ஜோதிகாவுக்கு தற்போது 45 வயதாகும் நிலையில் அவரது குழந்தைகளும் நன்றாக வளர்ந்து விட்ட நிலையில் இப்போது கூட அவர் உடலை ஃபிட்டாக வைத்திருக்க தீவிரமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார். அவ்வப்போது ஜோதிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா அஜித், விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவர் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து அவர்கள் ஓரளவுக்கு வளர்ந்த பின்னர் மீண்டும் நடிகை ஜோதிகா ’36 வயதினிலேஎன்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார் என்பதும் அதன் பிறகு தற்போது வரை அவர் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் ஜோதிகா தற்போது 45 வயதில் இருக்கும் நிலையில் தனது வயதுக்கேற்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.



இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெகு தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்  ’45 வயதில் எவ்வளவு கடினமான உடற்பயிற்சிகளை எல்லாம் அசால்டாக ஜோதிகா செய்கிறார் என்றும் அவர் வேற லெவல் தன்னம்பிக்கை உடையவர் என்றும் கூறி வருகின்றனர்

இந்த வீடியோவுக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகா பெண்ணினத்திற்கு ஒரு முன்னுதாரணம் என்றும் அவரை மாதிரி மற்ற பெண்களும் தீவிர உடற்பயிற்சி செய்தால் உடம்பை மட்டும் இன்றி மனதையும் பிட்டாக வைத்திருக்கலாம் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது

மேலும் இந்த பதிவில் அவர்உடற்பயிற்சி என்பது நீங்கள் எடையை குறைப்பதற்காக மட்டும் இன்றி, நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை பெறுவதற்கும்என்று கேப்ஷனாக ஜோதிகா பதிவு செய்துள்ளார்.

Advertisement