• Apr 17 2026

புதிய கெட்டப்பில் கலக்கும் ஜோகி பாபு.. வெளியானது மிஸ் மேகி படத்தின் டீசர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் ஹீரோவாகவும் யோகி பாபு கலக்கி வருகிறார். யோகி பாபு மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அதற்கெல்லாம் பெரிதாக ரியாக்ட்  பண்ணாமல் தொடர்ந்து தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார்.

குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் நடுவராக களமிறங்கியுள்ள மாதம்பட்டி ரங்கராஜ் இறுதியாக மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். அவர் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள படம் தான் மிஸ் மேகி.

மெஹந்தி சர்க்கஸ் படத்திற்கு பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் நடிப்பில் எந்த படங்களும் ரிலீஸ் ஆகாத நிலையில், ரசிகர்கள் இவர் இனி  படம் நடிக்க மாட்டாரோ என்ற அச்சத்தில் இருந்தார்கள். ஆனால் தற்போது மிஸ் மேகி படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார்.

இந்த நிலையில், லதா.ஆர் மணியரசு இயக்கத்தில் ஜோகிபாபு, ஆத்மிகா, மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த மிஸ் மேகி படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாக உள்ளது.


ஆரம்பத்தில் ஜோகி பாபுவை வழக்கறிஞரான வேடத்தில் காட்டி உள்ளார்கள். ஆனால் அதற்குப் பிறகு திடீரென பெண் வேடமிட்டு அவ்வை சண்முகி போல கெட்டப்பை மாற்றி முதன்முதலாக வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார்.

தற்போது ஓடிடியில் புதுமுக நடிகர்களின் படங்கள் விற்பனையாக வேண்டும் என்றால் ஜோகி பாபு அதில் ஒரு காட்சியிலாவது நடித்திருக்க வேண்டும். அவருடைய முகத்தை காட்டி பல ஓடிடி நிறுவனங்கள் படங்களை வாங்கி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மிஸ் மேகி படமும் ஓடிடியில் எளிதாக விற்பனையாகி விடும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.


Advertisement

Advertisement