தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் காஜல் அகர்வால், தனது அழகாலும் நடிப்பாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். திருமணத்திற்குப் பின்னரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், தற்போது தனது உடல் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
குறிப்பாக, குழந்தை பிறப்புக்குப் பின்னர் தனது உடல் எடையைக் குறைத்து மீண்டும் ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறியுள்ள காஜல் அகர்வால், அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், அவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, அவரது புதிய தோற்றமும் ஸ்டைலான ஆடைத் தேர்வுகளும் இணையத்தில் அதிகம் பேசப்படும் விஷயங்களாக மாறியுள்ளன.
இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அழகான தோற்றத்தில் மிகவும் ஸ்டைலாகக் காட்சியளிக்கும் காஜல் அகர்வாலின் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது விருப்பங்களையும் பாராட்டுகளையும் கருத்துகளாகப் பதிவிட்டு வருகின்றனர். இதனால், காஜல் அகர்வாலின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன.
Listen News!