தமிழ் திரையுலகில் இயக்குநராகவும் நடிகராகவும் வளர்ந்து வரும் அபிஷன் ஜீவிந்த் – அகிலா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். முதல் திரைப்படத்திலேயே தனது திறமையான இயக்கத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கதாநாயகனாகவும் தனது பயணத்தைத் தொடங்கிய அபிஷன், இந்த ஆண்டு வெளியான ‘வித் லவ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் இணைந்து ‘பிக்காசோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்வின்போது தனது காதலியிடம் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கேட்ட அபிஷனின் வீடியோ இணையத்தில் வைரலானது. பின்னர் இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்தனர்.
இந்நிலையில், தற்போது அபிஷன் ஜீவிந்த் – அகிலா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, குழந்தையின் முகத்தை மறைத்து அபிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிந்த திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!