• Oct 30 2026

அசத்தலான ட்விஸ்டுடன் ரசிகர்களை கவர்ந்த ‘நூறு கோடி வானவில்’ ட்ரெய்லர்.. வைரலான வீடியோ இதோ

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு முடிந்தும் வெளியாகாமல் நீண்ட காலம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அந்த வகையில், இயக்குநர் சசி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ‘நூறு கோடி வானவில்’.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், நடிகை சித்தி இத்னானி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், இப்படம் நிதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்தது. இதனால் இப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி ஜீ5 (ZEE5) ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காதல், உணர்வுகள் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் பலரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு ஆண்டுகளாக வெளியீட்டுக்காகக் காத்திருந்த இப்படம் ஓடிடியில் ரசிகர்களின் மனதைக் கவருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement