தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தனது ரசிகர் மன்றத்தின் ஊடாக முன்னெடுத்து வரும் சமூகப் பணிகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு கவனம் ஈர்த்து வருகின்றது.
ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டு, அதன் ஊடாக பல்வேறு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு உதவுதல், இரத்ததானம், கல்வி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நற்பணிகளில் இந்த இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் புதிய பிரிவாக கலை, இலக்கியப் பண்பாட்டுப் பிரிவு தொடங்கப்படவுள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் காணொளி ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.
கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு சார்ந்த விடயங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் புதிய பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கலை மற்றும் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தில் தற்போது புதிய பிரிவும் இணைக்கப்படவுள்ளமை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயனின் இந்த அறிவிப்பு தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!