• Jan 19 2025

முடிவின்றி தொடரும் சித்ராவின் மர்ம மரணம்..! ஹேம்நாத்துக்கு மீண்டும் கிடுக்குப்பிடி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் சித்ரா. இவரை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஏராளமான ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்து வைத்திருந்தார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவர் நடித்த முல்லை கேரக்டர் இன்றளவில் மட்டும் பேசப்படுகின்றது. அதில் அவருடைய நடிப்பும் பக்குவமும் பலரின் கவனம் பெற்று இருந்தது. அந்த சீரியல் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது எனலாம்.

இவ்வாறு சின்னத்திரையில் பிரபல நட்சத்திரமாக ஜொலித்து வந்த நடிகை சித்ரா, எதிர்பாராத விதமாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அதன் பின்பு சித்ராவின் உயிரிழப்பிற்கு காரணம் அவருடைய கணவர் ஹேம்நாத் தான் என கூறப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் உட்பட ஏழு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். அதன் பின்பு சித்ராவின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹேம்நாத்தை கைது செய்தார்கள்.


எனினும் சித்ராவின் வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. அதில் சித்ராவின் மரண வழக்கில் ஹேம்நாத்துக்கு தொடர்பான எந்த ஒரு ஆதாரத்தையும் போலீசார் சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தினால் ஹேம்நாத்தை விடுதலை செய்வதாக அறிவித்தார்கள்.

இந்த நிலையில், தற்போது சித்ராவின் தந்தை இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். தற்போது இந்த தகவல் மீண்டும் வைரலாகி உள்ளது. எனினும் சித்ராவின் மரணத்திற்கு நீதி கிடைக்காத என அவருடைய குடும்பத்தார் மட்டுமின்றி ரசிகர்களும் எதிர்பார்த்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement