தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகளும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகின்றன.
அந்த வகையில், ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் தான் ‘SK27’. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிவகார்த்திகேயன், இந்தப் படத்திலும் புதிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ‘SK27’ திரைப்படம் தொடர்பான புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அடுத்தகட்டப் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும், படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், ‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால், இப்படம் ரசிகர்களுக்கு புதிய திரை அனுபவத்தை வழங்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Listen News!