தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. திரைப்படங்களில் நடிப்பதைக் கடந்து, தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வெளிப்படையான கருத்துக்கள் மூலமாகவும் அவ்வப்போது கவனம் ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், அண்மையில் பேட்டி ஒன்றில் தனது காதல் வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன.
குறித்த பேட்டியில் பேசிய ரெஜினா, தனது காதல் உறவு கடந்த 2020ஆம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அந்த உறவில் ஏற்பட்ட துரோகம் தன்னை மனதளவில் முற்றிலும் உடைத்துவிட்டதாகவும், அதிலிருந்து மீண்டு வருவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த அனுபவத்திற்குப் பிறகு தனது நேரத்தையும் கவனத்தையும் தனக்காக மட்டுமே செலவிட வேண்டும் என முடிவெடுத்ததாகக் கூறியுள்ளார்.
குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் தனிமையில் இருந்தபோது சுய அன்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியதாகவும், அதுவே தனது மனநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த கால வலிகளிலிருந்து மீண்டு, தன்னைத் தானே நேசிக்கக் கற்றுக்கொண்டதே இன்று தெளிவான மனநிலையுடன் வாழ்வதற்கான முக்கியக் காரணம் என ரெஜினா பகிர்ந்துள்ள கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.
Listen News!