• Oct 31 2026

சீதையாக நடிக்க சாய் பல்லவிக்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளியான ரகசியத் தகவல்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் திறமையான நடிகைகளில் ஒருவராக வலம் வரும் சாய் பல்லவி, தனது இயல்பான நடிப்பாலும் தனித்துவமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

குறிப்பாக, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் அவர், தற்போது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதன்படி, நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி, சீதையாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடிப்பதற்காக சாய் பல்லவிக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அதன்படி, இரண்டு பாகங்களிலும் சீதையாக நடிப்பதற்காக அவருக்கு மொத்தமாக 12 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு பாகத்திற்கும் தலா 6 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இது சாய் பல்லவியின் திரைப்பயணத்தில் இதுவரை அவர் பெற்றுள்ள அதிகபட்ச சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement