• Oct 30 2026

எனது கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும்.. – வருங்கால துணை குறித்து சாய் பல்லவி ஓபன்டாக்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரையுலகில் தனித்துவமான நடிப்பாலும், இயல்பான அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. திரைப்படங்களில் நடிப்பதைக் கடந்து, தனது தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் வாழ்க்கை குறித்த வெளிப்படையான அணுகுமுறையாலும் இவர் அடிக்கடி கவனம் பெற்று வருகிறார்.

அந்த வகையில், நிகழ்ச்சி ஒன்றில் தனது வருங்கால வாழ்க்கைத் துணை குறித்து சாய் பல்லவி தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதன்போது தனது எதிர்கால கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது குறித்துப் பேசிய அவர், தனது தனிப்பட்ட சுதந்திரத்தையும் தொழிலையும் மதிப்பவராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது லட்சியங்களை அடைவதற்கு உறுதுணையாக இருந்து, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவளிக்கும் ஒருவரே தனது வருங்கால கணவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக இருப்பது மிகவும் அவசியம் என்றும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோல், நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும், சமையல் செய்யத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் சிரித்துக்கொண்டே தெரிவித்துள்ளார்.

திருமண வாழ்க்கையில் அன்பு மட்டுமன்றி, பரஸ்பர மரியாதை, சுதந்திரம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவையும் முக்கியம் என்பதை வெளிப்படுத்தும் அவரது இந்தக் கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement