• Jan 19 2025

பொருட்காட்சிக்கு வந்த ஜெனி.. அம்மாவுக்கு செழியன் கொடுத்த கிப்ட்..! பாக்கியாவை கல்யாணம் செய்யுமாறு பழனிக்கு அதிர்ச்சி கொடுத்த ராதிகா!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகியுள்ளது. அதில்  என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க.

அதன்படி, பாக்கியா ரொம்ப நாளாவே எதிர்பார்த்திருந்த பொருட்காட்சி ஆரம்பமாகி களைகட்டிக் கொண்டிருக்க, நடந்தவற்றை எண்ணி பாக்கியாவும் எழிலும் சந்தோசப்படுகின்றனர். எனினும், வீட்டார்கள் ஒருத்தரையும் இன்னும் காணமே என்று கவலையும் படுகின்றனர். 

இதன் போது செல்வி அக்கா, உங்க மூத்த பையனையும் காணோம் என்று சொல்ல, அவனுக்கு ஏதாவது வேலை இருக்கும் என்று சொல்லிக் கொண்டு திரும்பும் போது பின்னாடி செழியன் இருக்கின்றார். இதைத்தொடர்ந்து செழியன் பாக்கியாவுக்கு ஒரு சின்ன கிப்ட் கொடுக்கிறார். அதை பார்த்து பாக்கியா ரொம்ப சந்தோஷப்படுறா. 


இன்னொரு பக்கம் எல்லாரும் நின்று பேசிக் கொண்டிருக்க ஜெனி அந்த இடத்திற்கு வருகிறாள்.  அங்கு வந்து வாசலில் நின்ற ஜெனியை யாரும்  கவனிக்கவில்லை. அவர் வாசலில் நின்று யோசித்துக் கொண்டே மீண்டும் வெளியே செல்ல அமிர்தா அவரை பார்த்து விடுகிறார்.

இவ்வாறு வெளியே போன ஜெனியை, மீண்டும் உள்ளே வருமாறு அமிர்தா அழைக்க, இல்ல நான் உள்ள வந்த சரியா இருக்காது என்று சொல்லி, தன் கையில் இருந்த கிப்டை பாக்கியாவிடம் கொடுக்குமாறு சொல்லிவிட்டு  கிளம்பி செல்கிறார் ஜெனி.

இதை தொடர்ந்து, நடந்தவற்றை பாக்கியாவிடம் சென்று அமிர்தா சொல்ல, நான் போய் பாக்கிறேன் என பாக்கியா வெளியே ஓடிச் செல்கிறார். ஆனாலும், ஜெனி காரில் ஏறிச்செல்ல, காரின் பின்னே வந்து பாக்கியா கூப்பிடுகிறார். இதனை கண்ணாடி வழியாக பார்த்தும் கீழே இறங்காமல் அப்படியே சென்றுவிடுகிறார் ஜெனி.  


மறுபக்கம் பாக்கியா செய்த ஸ்வீடை பழனிச்சாமி சுவைத்து பார்த்து பாராட்டுகிறார். அந்த இடத்திற்கு ராதிகா தனது நண்பியுடன் வர. பாக்கியா சென்று வாங்க.. வாங்க.. என வரவேற்கிறார். செல்வியிடமும் அவங்களை கொஞ்சம் கவனிச்சுக்கோ.. என்று ராதிகாவை காட்டி சொல்லுகிறார்.

மீண்டும் பழனிச்சாமி இருந்த இடத்திற்கு சென்ற பாக்கியாவிடம், எப்படி மேடம் உங்களால மட்டும் இப்படி இருக்க முடியுது? அவங்கள நினைச்சா உங்களுக்கு கோவம் வரலையா? என்று கேட்க, என்ட முன்னால்  கணவர்  என்று நினைச்சா கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.. ஆனா எனக்கு ராதிகாவை முன்னாடியே தெரியும். நான் ஸ்கூல் முடிச்ச பிறகு அவர கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டுக்கு வந்துட்டேன். அதுக்கு பிறகு பிள்ள குட்டி என்று அப்படியே போயிட்டு என்ட வாழ்க்கை.. எனக்கு பிரண்ட்ஸ் என்று யாருமே இல்ல. செல்வி மட்டும் வேலைக்கு வருவா..அவ கூட மட்டும் கதைப்பான்.. ஆனால் எதிர்ச்சியா ஒரு நாள் ஸ்கூல்ல வச்சு ராதிகாவை சந்தித்தேன். அவங்களால தான் இந்த வாழ்க்கையே இப்படி மாறிச்சு.. என  ராதிகாவை பற்றி பெருமையாக சொல்லுகிறார் பாக்கியா.


இதைத் தொடர்ந்து ராதிகாவிடம் சென்ற பழனிச்சாமி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, எப்படி மேடம்? பாக்கியாட்ட கேட்ட கேள்விய உங்க கிட்ட கேக்கிறேன். ஏதும் தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க என சொல்லி, எப்படி இவ்வளவு சகஜமா பாக்கியாவோடு இருக்கீங்க என கேக்க,  எனக்கு பாக்கியா  என்ன பதில் சொன்னாக்கண்ணு தெரியல.. ஆனா எனக்கு கோபி தான் அவங்களோட ஹஸ்பண்ட் என்று முதல் தெரியாது.. எனக்கு கோபிய தெரிய முதலே  பாக்கியாவ தெரியும்... என்ட முதல் கணவர் எனக்கு ரொம்ப பிரச்சனை கொடுத்தப்போ பாக்கியா தான் எனக்கு ஒரு அக்காவா, நண்பியா கூட இருந்தாங்க.. நிறைய சப்போர்ட் பண்ணினாங்க என சொல்லுகிறார். 

இதையடுத்து, நீங்க இன்னும் கல்யாணம் பண்ண தானே.. ஏன் சார்? என  பழனிச்சாமியிடம் ராதிகா கேக்க, அது அப்டியே வீடு, கமிட்மென்ஸ் என இருந்துட்டான் என பழனி சொல்ல,  உங்களுக்கு பிடிச்சிருந்தா பாக்கியாவ கல்யாணம் பண்ணிக்கலாம் தானே சார் என ராதிகா சொல்ல அதிர்ச்சி அடைகிறார் பழனிச்சாமி.இதுதான் இன்றைய எபிசோட் 

Advertisement

Advertisement