• Jan 18 2025

ரோபோ சங்கருக்கு அடித்த ஜாக்பார்ட்! கமல்காசன் கொடுத்த ரிசப்ஷன் கிப்ட் ? கோடியில் புரளும் இந்திரஜா !

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் மிகவும் ட்ரெண்டிங்காக இருக்கும் திருமணம் என்றால் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜாவின் திருமணமாகும். மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட இந்த திருமணத்தில் பல பிரபலங்களும் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் வழங்கிய பரிசுகளை பிரித்து பார்த்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் இந்திரஜா.


முன்னணி காமெடி நடிகனாக இருக்கும் ரோபோ சங்கரின் மகளும் , விஜயின் பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தின் மூலமும் அறியப்பட்டவருமே இந்திரஜா ஆவார். இவர் சமீபத்தில் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற இவர்களது ரிசப்ஷனுக்கு வருகைதந்த நடிகர் கமல் காசன் தங்க ஆபரணம் ஒன்றை பரிசளித்துள்ளார்.


கமல் , சூரி , விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களும் கலந்து கொண்ட இவர்களது ரிசப்ஷனில் பல விலையுயர்ந்த பொருட்கள் பரிசாக கிடைத்துள்ளது. அவ்வாறே கமலஹாசன் இவர்களது பெயர் பதித்த தங்க சங்கிலியையும் , மேலும் அவர்களது நண்பரில் ஒருவர் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான 2 ரோலெக்ஸ் வாட்ச் என பல பரிசுகளை வழங்கி உள்ளனர்.  

Advertisement

Advertisement