நடிகை ஊர்வசி நடித்த ’ஜே.பேபி’ என்ற
திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்
பா. ரஞ்சித், ’ஜே.பேபி’ திரைப்படம்
வணிகரீதியில் தோல்விதான் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த
படம் எங்களுக்கு மனநிறைவை அளித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஊர்வசி முக்கிய வேடத்தில் நடித்த ’ஜே.பேபி’ என்ற
திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் தனது சின்ன சின்ன
சேட்டை காரணமாக தனது இரு மகன்களுக்கும்
பிரச்சனை ஏற்படுகிறது என்று திடீரென ஊர்வசி மாயமாகிவிட, அவரை அவரது இரண்டு
மகன்கள் தேடி கண்டுபிடித்துக் கொண்டு
வருவது தான் இந்த படத்தின்
கதை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் மிகவும் எதார்த்தமாகவும்
ஊர்வசி மற்றும் அட்டகத்தி தினேஷின் இயல்பான நடிப்பிலும் நல்ல ரிசல்ட் ஊடகங்களில்
கிடைத்த நிலையில் இந்த படத்திற்கு பெரிய
ஆதரவு கிடைக்கவில்லை. தமிழகம் முழுவதும் இந்த படம் மிகக்குறைந்த
வசூலை செய்ததாகவும் தயாரிப்பு செலவு கூட வசூலாக வரவில்லை
என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து திரைப்பட
விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் பா. ரஞ்சித் ’சிறிய
படங்களை வெளியிட முடியாமல் பல தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு
கொண்டிருக்கிறார்கள், அப்படியே வெளியிட்டாலும் அந்த படங்களுக்கு நல்ல
ரிசல்ட் கிடைத்தாலும் வணிகரீதியில் வெற்றி பெறுவது என்பது சவாலான காரியமாக உள்ளது
’ஜே.பேபி’ திரைப்படம் நல்ல விமர்சனம் பெற்றாலும்
வணிகர் ரீதியாக அது வெற்றிப்படமா என்பதில்
சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த
படத்தை எடுத்தது எங்களுக்கு மனநிறைவாக இருந்தது, படம் பார்த்தவர்களும் பாராட்டினார்கள்.
அது ஒன்றே எங்களுக்கு போதும்
ஆனால் அதே நேரத்தில் ஒரு
திரைப்படம் வணிக ரீதியான வெற்றி
பெற்றால் தான் அந்த படத்தில்
பணிபுரிந்த கலைஞனுக்கும் அதில் வேலை பார்த்தவர்களுக்கும் அடுத்தடுத்த வாய்ப்புகள்
கிடைக்கும்’ என்று கூறினார்.
Listen News!