கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக காணப்பட்டவர் தான் ஜெயராம். அவருடைய மகனான காளிதாஸ் ஜெயராமுக்கும் சமீபத்தில் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. காதல் திருமணமாக நடந்தேறிய இவர்களின் திருமணம் குறித்து காளிதாஸ் ஒரு பேட்டில் இவ்வாறு கூறியுள்ளார்.
அதாவது "எங்களுடைய காதல் ரகசியமாக இருந்தது. நானும் வீட்டில் சொல்லவில்லை, தாரிணியும் அவரது வீட்டில் சொல்லவில்லை இப்படியே லவ் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நாள் தாரிணி தொலைபேசியின் புளூட்டுத் என்னுடைய கார்வுடன் கனெக்ட் ஆகி இருந்தது. இதனை என்னோட சிஸ்டர் கண்டு புடிச்சி அவங்கதான் வீட்டுல போட்டு கொடுத்தாங்க அதுக்கு அப்புறம் தான் எல்லாமே நடந்துச்சு" என்று கூறியுள்ளார்.
மேலும் ஒரு நாள் குடும்பத்தோட படம் பார்க்க போய் இருந்தோம். அப்போது அவங்க பேமிலியும் வந்தாங்க 2 பேருடைய குடும்பத்தாருக்கும் எங்களோட லவ் விஷயம் தெரியாததால் பக்கத்து பக்கத்துல இருந்து படம் பார்த்தோம் அப்போ எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார் காளிதாஸ்
Listen News!