• Dec 18 2024

குட் நியூஸ் சொன்ன நாஞ்சில் விஜயன்! வாழ்த்து கூறும் ரசிகர்கள்! வீடியோ இதோ

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் நடிகர்  நாஞ்சில் விஜயன் இவர் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு நாஞ்சில் விஜயன் குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார். என்ன அந்த குட் நியூஸ் என்று பார்ப்போம் வாங்க.


கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிக்காட்டி இப்போது மக்கள் கொண்டாடும் பிரபலமாக வலம் வருபவர் நாஞ்சில் விஜயன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாதியிலேயே வெளியேறியிருந்தார். அதன்பின் தனது மனைவி மரியாவுடன் இணைந்து Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.


இந்நிலையில் மரியாவை திருமணம் செய்துகொண்ட நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்ட்ராகிராமில் தனது மனைவி கர்ப்பமாக உள்ளார் என்பதனை " இனி எங்க வீட்டுலையும் விஷேசம், நான் அப்பாவாக போகிறேன்" என்று அழகிய வீடியோ மூலம் ரசிகர்களுக்கு கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குட்டி விஜயன் வர போகிறார், இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ அந்த அழகிய வீடியோ.

Advertisement

Advertisement