• Jan 18 2025

விஜய்யின் அரசியலும் கமலின் அரசியலும் ஒன்றா? அரசியலில் அவர் எல்கேஜி! அஜித்துக்கு சான்ஸ் இல்லவே இல்ல! வலைப்பேச்சு அந்தணன் பகீர்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பேசு பொருளாக காணப்படுவது, நடிகர் விஜய் புதிதாக அரசியலுக்கு என்ட்ரி கொடுத்தது தான்.

தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகராக காணப்படுபவர் தான்  விஜய். இவருக்கு உலகளவில் அமோக வரவேற்ப்பு உண்டு.

இவர் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிதாக கட்சி ஒன்றை ஆரம்பித்தார். நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர் வட்டாரம் இருப்பது யாவரும் அறிந்த ஒன்று. 

அதன்படி அவர் கட்சி ஆரம்பித்த உடனேயே அவருக்கான வாக்கு விதம் கிடுகிடுவென உயர்ந்தது. கோடிக்கணக்கானோர் கட்சியில் இணைந்தனர்.

இதன் காரணமாக தமிழக அரசியல் தலைமைகள் சிலர் விஜயை காமெடி பீஸ் ஆக்கி, அவரை அரசியல் வீழ்த்த வேண்டும் என பல கோடிகளை செலவழிப்பதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது.


இந்த நிலையில், தமிழ் சினிமாவில் நடிகர் விஜயின் இடத்தை அஜித் பிடிக்கப்  போகிறாரா? என்றும் கமலின் அரசியலும் விஜய்யின் அரசியலும் ஒன்றா? என்ற கேள்விக்கு பிரபல வலைப்பேச்சு அந்தணன் பேட்டி வழங்கியுள்ளார். அதன்படி அவர் வழங்கிய பேட்டியில்,

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் அவர்களின் இடத்தை அஜித் பிடித்துவிடுவார் என சினிமா வரலாற்றில் தற்போது பேசப்படுகிறது அதைப்பற்றி வினாவிய போது,

அது எல்லாம் சும்மா.. இப்ப நான் விஜய் ரசிகர். விஜய் திடீரென அரசியலுக்கு போயிட்டாரு. ஆனா நான் இப்ப அஜித்தை வாங்க என்று அவரை ரசிக்க முடியுமா? அப்படி கிடையாது.  விஜய் ரசிகர்கள் விஜய்  ரசிகர்கள் தான். அதுபோல அஜித்தின் ரசிகர்கள் அவர்களுக்குரிய ரசிகர்கள் தான்.


சினிமாவில் விஜய் இடத்தை அஜித் பிடித்து விடுவாரா என்றால் அது உண்மை கிடையாது. விஜயின் இடம் அப்படியேதான் இருக்கும். அதுக்கு யாராவது ஒருவர் போட்டி போட்டு தான் அந்த இடத்திற்கு வர வேண்டும். 

அஜித் தன்னுடைய போட்டியாளராக விஜயை தான் நினைத்துக் கொண்டுள்ளார். ஆனா அஜித் அவருடைய இடத்தில் இருப்பார். விஜய்யின் இடத்தை இன்னொருவர் தான் அவருக்கு நிகராக நிரப்ப வேண்டும்.

மேலும் ஒரு பக்கம் ரஜினி, இன்னொரு பக்கம் விஜய்,  இடையில கமல் இருக்கிறார். நடிகர் கமல் இப்போது பாராளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிட முடியும் என்று சொல்லி உள்ளார். அதைப் பற்றி வினாவிய போது,

அது நடக்கிற கதை கிடையாது. மக்கள் செல்வாக்கு தான் எல்லாத்துக்கும் காரணமாக அமையும். எனினும் தற்போது அவருடைய கட்சி பெரிய கட்சி இல்லை.  ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்து இருந்தாலோ, தற்போது விஜய் கட்சி ஆரம்பித்து இருந்த போதிலும் அவர்களுக்கு கமலின் அரசியல் ஒப்பாக இருக்காது. 

அரசியலைப் பொறுத்தவரை கமல் ஒரு எல்கேஜி தான்.. தனது கட்சியை பலப்படுத்த நினைத்த கமல், அதனை சரியான மேற்கொள்ளவில்லை எனவும் சொல்லியுள்ளார்.

Advertisement

Advertisement