• Jul 27 2024

இளையராஜாவின் பயோபிக் படத்தினால் மாற்றம் கண்ட தனுஷ்! தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி அதிரடி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ். இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு முதன் முதலாக அறிமுகமானார். 

நடிகர் தனுஷ் தற்போது வரை பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தனுஷ் நடிப்பில் இறுதியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில், ராயன், குபேரா, இளைஜராஜாவின் பயோபிக் படம் என ஏராளமான படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.


இந்த நிலையில், தமிழில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும்  பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ், தனது  சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி உள்ளாராம் என தகவல் வெளியாகி உள்ளது.


அதாவது, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில், இளையராஜாவின் கேரக்டரில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பது யாவரும் அறிந்த ஒன்று. 

இந்த படத்தினை இரண்டு பாகங்களாக எடுக்க உள்ளதாகவும், அதில் ஒரு பாகத்திற்கு 50 கோடி ரூபா படி இரண்டு பாகத்திலும் நடிக்க 100 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டு உள்ளராம் தனுஷ்.

கேப்டன் மில்லர்  படத்தில் நடித்ததற்கு 30 கோடி ரூபாவை சம்பளமாக வாங்கிய தனுஷ், தற்போது தனது சம்பளத்தை 100 கோடியாக உயர்த்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement