சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், கனகா வீட்டில் தடபுடலாக கல்யாண வேலைகள் நடக்கின்றது. அதன்படி முத்துவும் மீனாவும் பூ அலங்காரம் செய்ய, ஸ்ருதியும் ரவியும் சாப்பாடுகளை அடுக்கிக் கொண்டு வருகின்றனர்.
அதேபோல, ஸ்ருதி சொன்னதனால் ரோகினியும் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய வருகின்றார். அங்கு அவர்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்கின்றனர். ஆனாலும் முத்து, ஒன்றாக சந்திக்கத்தான் முடியும், ஒன்றாக வாழ முடியாது என்று கூறுகின்றார்.
இதைத்தொடர்ந்து மணப்பெண்ணுக்கு ரோகினி அலங்காரம் செய்கின்றார். இதன்போது மனோஜும் அங்கு வந்து சேர்ந்து விடுகின்றார். ஆனால், ஒருவரை ஒருவர் யாரும் சந்தித்துக் கொள்ளவில்லை.

அதன் பின்பு, மனோஜும் அவருடைய நண்பர்களும் ரூமில் இருக்க, சந்தோஷும் ஜீவாவும் தாங்கள் கீழே போய் கல்யாண வேலைகளை பார்த்துவிட்டு வருவதாக செல்கின்றனர். இதன்போது முத்து, மீனாவை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து மீண்டும் ரூமுக்குத் திரும்பி வந்து விடுகின்றனர்.
இந்த விஷயத்தை மனோஜிடம் சொன்னதும், அவர் அங்கிருந்து ஜன்னல் வழியாக தப்பித்துச் செல்ல முயற்சிக்கின்றார். ஆனாலும், அவரை கூட இருந்தவர்கள் தடுத்து விடுகின்றனர். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!