• Mar 14 2025

'தண்டேல்' நிஜமா நடந்த உண்மைக் கதையா..? பட ட்ரைலரோடு சாய் பல்லவி கொடுத்த அப்டேட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நாக சைதன்யா - சாய்பல்லவி நடிப்பில் வெளியாகவுள்ள  திரைப்படம் தான் தண்டேல். இந்த படத்தை இயக்குநர் சந்தூ மாண்டேட்டி  இயக்கியுள்ளார். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாக உள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை சாய் பல்லவி இந்த படத்தின் மூலம் நாக சைதன்யாவுடன் இணைந்துள்ளார். இது நாக சைதன்யாவின் 23வது படமாக காணப்படுகின்றது.

d_i_a

தெலுங்கில் சாய்பல்லவி நடிப்பில் இறுதியாக விராட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.


இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி 'தண்டேல் படம் நிஜமாக உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக..' தெரிவித்து உள்ளார். மேலும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று உள்ளது.

குறித்த ட்ரைலரை பார்க்கும்போது, நாக சைதன்யா இந்த படத்தில் மீனவராக நடித்துள்ளார். ஆரம்பத்தில் நாக சைதன்யாவுக்கும் சாய்பல்லவிக்கும் இடையே அதிகமான காதல் காட்சிகள் காட்டப்பட்டன. அதற்குப் பிறகு மீனவக் கூட்டத்தின் தலைவராக முக்கிய பொறுப்பை ஏற்கின்றார். நாக சைதன்யா அதன்பின்பு மீன் பிடிக்கப் போகும் இடத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினிடம் இவர்களுடைய கூட்டம் மாற்றிக் கொள்கின்றது.


மேலும் பாகிஸ்தான் ராணுவத்தை நாக எதிர்ப்பது போலவும் இந்தியாவின் பலத்தை பற்றி பாகிஸ்தானிடம் நாக சைதன்யா பேசுவதும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. 

அதன் பின்பு அவரை அங்கிருந்து சாய்பல்லவி எப்படி இருக்கின்றார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக காணப்படும். இந்த படத்தை பார்க்கும்போது மரியான் படம் நினைவுக்கு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement