குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக புகழ்பெற்ற மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்த அவர் சமையல் கலைஞராகவும் மற்றும் முக்கிய வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் சர்வீஸ் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது அவருக்கு தொடர்புடைய ஒரு புதிய செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்படுகின்றது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா காதலர் தினத்தை மாதம்பட்டி ரங்கராஜுடன் கொண்டாடியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோடு அவர்களது சேர்க்கை மற்றும் அவர்கள் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
ஜாய் கிரிஸில்டா ஏற்கனவே திருமணம் செய்துகொண்டு விவாகரத்து ஆனவர் தற்போது மாதம்பட்டி ரங்கராஜுடன் இணைந்து காதலர் தினத்தை கொண்டாடியதின் மூலம் புதிய சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். இவர்களின் சில ரம்யமான புகைப்படங்கள் மற்றும் போன் வால்பேப்பர் பொது இடங்களில் பரவியுள்ளன இதனால் மாதம்பட்டி ரங்கராஜ் விரைவில் இரண்டாவது திருமணம் செய்யப்போகின்றாரா ?என நெட்டிசன்கள் முறைப்படி கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
Listen News!