சினிமா ஒரு பக்கம் இருக்க கார் ரேசிங்கில் தனது கவனத்தை செலுத்தி வரும் அஜித் கடந்த ஆண்டு துபாயில் இடம்பெற்ற 24 மணித்தியால கார் ரேசிங்கில் கலந்து கொண்டு 3 ஆவது இடத்தை பிடித்து இந்தியா அணிக்கு பெருமை சேர்த்து கொடுத்தார்.
குறித்த பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் நடைபெற்ற பயிற்சியில் இவர் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது இவர் ஒட்டிய கார் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது பாதுகாப்பான தலைக்கவசம் அணிந்திருந்தமையினால் உயிர்தப்பியதாக அன்று தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது " ஸ்பெயின் ரேசிங் ஒன்றில் அஜித் கார் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் எனவும் இந்த ரேசிங்கில் மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதில் அஜித் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விபத்தில் அஜித்திற்கு காயம் ஏற்படவில்லை எனவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!