• Apr 30 2024

பாரதி கண்ணம்மா சீரியல் குழு இப்படியொரு பிளானில் உள்ளார்களா? ஷாக்கான ரசிகர்கள், வைரலாகும் வீடியோ

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் மலையாளம் மொழித் தொடரான 'கருத்தமுத்து' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். 


இந்த தொடரில் பாரதியாக மேயாத மான் என்ற படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவும் அஞ்சலியும் இருவரும் மாற்றாந்தாய் சகோதரிகள். கண்ணம்மா கருத்த நிறம் கொண்டவள். அஞ்சலி வெள்ளை நிறம் கொண்டவள்.


கண்ணம்மாவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பாரதி என்ற கணவன் அமைகிறான். அதன் பின் அவள் வாழ்க்கையும் பாரதி என்ற கணவனின் வாழ்க்கையும் எவ்வாறு பயணிக்கிறது இவர்களின் வாழ்வில் அஞ்சலி, வெண்பா ஆகியோரால் வரவிருக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து, இந்த கதை நகர்கின்றது.


இந்நிலையில் இன்பமான தகவல் போல் இந்த தொடர் டிசம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும் என செய்தி வந்தது, இதனால் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.


ஆனால் இப்போது சீரியல் குழுவின் ஒரு வீடியோ மக்களை ஷாக் ஆக்கியுள்ளது. அதுஎன்னவென்றால் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் மற்றும் அதில் நடிக்கும் அகில், அஞ்சலி மற்றும் ஹேமா இடம்பெற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.


அதில் மக்கள் பாரதி கண்ணம்மா தொடர் எப்போது முடியும், சீரியல் குழு எங்களுக்கு END கிடையாது என வீடியோ வெளியிட்டுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement