• Jan 19 2025

இன்டர்வியூ நடுவே முத்துவிடம் கடன் கேட்ட ரோகிணி.. அசிங்கமாக திட்டுவாங்கிய சம்பவம்! பேட்டியில் உளறிய நடிகை

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தற்போது TRP ரேட்டிங்கில் முன்னிலைக்கு வந்ததால் இதன் புகழ் இன்னும் கொடிகட்டி பறக்கின்றது.

இந்த சீரியலில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை தான் சல்மா அருண். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையிலேயே நடிக்க வந்ததாக பேட்டில் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் இன்னும் பிரபலம் ஆனதை தொடர்ந்து அதில் நடிக்கும் சல்மா அருணை  பிரபல சேனல் ஒன்று பேட்டி எடுத்துள்ளது. அதில் அவர் கூறுகையில்,

சிறகடிக்க ஆசை சீரியலில் நான் நடிக்கும்போது ஆரம்பத்தில் எனக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் அதிகமாக குவிந்தது. இதன் காரணமாக நான் கவலையாக இருக்கும்போது எனக்கு எனது கணவர் ஆறுதல் கூறுவார். 


ஒரு நாள் நான் எனது டைரக்டரிடம் இது பற்றி சொன்னபோது அவர் கமெண்ட்ஸ் ஒன்றையும் பார்க்காத, உங்க வேலையை மட்டும் பாரு என்று எனக்கு அட்வைஸ் பண்ணினார். அதற்குப் பிறகு நானும் இந்த சீரியலில் ரோகிணிக்கு தானே இந்த கமெண்ட்ஸ் போடுறாங்க. சல்மா அருணுக்கு இல்லை தானே. எனது இயல்பு என்னவென்று எனது செட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் என்று இதுவரையில் ஜாலியாக இருக்கின்றேன். அதற்குப் பிறகு எந்த கமெண்ட்சையும் நான் பார்ப்பதில்லை என்று கூறினார்.

மேலும் சிறகடிக்க ஆசை செட்டில் எல்லோரும் சமமாக தான் இருப்போம். ஒரு நாள் நான் திட்டு வாங்கினால் இன்னொரு நாள் மீனா திட்டு வாங்குவாங்க எல்லாரும் ஹேப்பியா இருப்போம் என்றும் சொல்லி உள்ளார்.


அந்த நேரத்தில் உங்களுக்கு இப்போ ஒரு கஷ்டம் என்றால் உடனே யார் உதவுவார்கள் என்று கேட்க, எல்லாருமே ஹெல்ப் பண்ணுவாங்க. யாருமே இல்ல என்று சொல்ல மாட்டாங்க என்று சொல்லி உடனே முத்துவுக்கு கால் பண்ணுகிறார்.

இதன் போது முத்து சூட்டிங்கில் இருந்ததால் அவரது அசிஸ்டன்ட் போனை எடுக்கிறார். அதன் பிறகு மீனாவுக்கு கால் பண்ணவும் அவரது ஃபோனும் நாட் ரீச்சபிள். எனினும் முத்து திரும்பவும் போன் பண்ணி என்ன விஷயம் என்று கேட்க, எனக்கு அவசரமாக 5000 ரூபாய் வேணும் என்று சொல்ல உடனே அனுப்புவதாக  சொல்லுகிறார். 

ஆனாலும் அதற்குப் பிறகு மீண்டும் போன் எடுத்த ரோகிணி, நான் இன்டர்வியூ ஒன்றில் இருக்கேன் என்று உண்மையை சொல்கிறார் . அதற்கு பிறகு தான் தனது கணவரை டாடி என்று தான் கூப்பிடுவேன் என்றும், எனக்கு இந்த லைஃப் பிடிச்சிருக்கிறது. காலையில 9 மணிக்கு போய் ஐந்து மணிக்கு வந்துருவேன். இதனால என் குழந்தையோட விளையாடக்கூடிய சூழல் உள்ளது.

மேலும், எனக்கு வெளியில் சூட்டிங் போய் தங்கினால்  ஒத்துக்கொள்ளாது. வீட்டு சாப்பாடு தான் சாப்பிடுவேன். வீட்டில் இல்லை என்றாலும் எனக்கு காய்ச்சல் வந்துடும் என்றும் சொல்லியுள்ளார்.

Advertisement

Advertisement