• Jan 18 2025

செம்ம ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் ஜோதிகா.. வைரலாகும் போட்டோஸ்!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக காணப்பட்ட ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் தனது பிள்ளைகள் வளர்ந்த நிலையில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு கணவர் சூர்யாவின் முழு ஒத்துழைப்புடன் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, ஜாக்பார்ட், மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, உடன் பிறப்பே உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

சமீபத்தில் தனது குடும்பத்துடன் மும்பையில் குடியேறியதை தொடர்ந்து ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.


அதன்படி, ஜோதிகா மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான சைத்தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவரின் கைவசம் இரண்டு ஹிந்தி படங்கள் உள்ளது.

இந்த நிலையில், ஜோதிகா - ஸ்ரீகாந்த் நடித்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையின், அதன் புரோமோஷ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிகாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஜோதிகாவின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள், இவர் இரண்டு குழந்தைக்கு அம்மா என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.


Advertisement

Advertisement