• Jan 19 2025

பிறந்த நாளில் புதிய அவதாரம் எடுத்த சமந்தா! இனி புரொடக்ஷன் எல்லாம் தாறுமாறா கிழிய போகுது!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக திகழ்ந்துவரும் நடிகை சமந்தா, இன்றைய தினம் தனது 37 வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு திரையுலக நட்சத்திரங்கள் மட்டும் இன்றி சமந்தாவின் தீவிர ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனும் அவர் இயக்கத்தில், சமந்தா, நயன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான  காட்டுவாக்கல இரண்டு காதல் படத்தின் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து நடிகை சமந்தாவுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நடிகை சமந்தாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த Maa Inti - Bangaram என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகின்றது.


குறித்த போஸ்டரில் சமந்தா துப்பாக்கியை கையில் ஏந்தி இருப்பதுடன், பார்ப்பதற்கு இதுவரை இல்லாத புதிய கெட்டப்பில் அவர் நடித்துள்ளதாக தெரிகின்றது.

குறித்த திரைப்படத்தை Tralala Moving Pictures என்ற நிறுவனம் தயாரித்து உள்ளதோடு, அந்த நிறுவனமும் நடிகை சமந்தா உருவாக்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் எனவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.


அதன்படி இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை சமந்தா நடிகையாக மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் களம் இறங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement