• Jan 19 2025

ஜீவாவுக்கும் ஸ்ருதிக்கும் திடீரென ஏற்பட்ட கனெக்சன்.. கதையில் ட்விஸ்ட்டா? ரோகிணி கோவிச்சுக்க மாட்டாங்களா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஜீவா கேரக்டர் மீண்டும் வந்ததும் சீரியல் கூடுதல் விறுவிறுப்பை அடைந்துள்ளது என்பதும் குறிப்பாக நேற்று வெளியான முன்னோட்ட வீடியோவில் ஜீவாவிடம் இருந்து மனோஜ் மற்றும் ரோகிணி 15 லட்ச ரூபாய் திருப்பி வாங்கியது கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்னும் ஜீவாவின் கேரக்டர் நீடிக்கப்படுமா? அவர் மனோஜை பழி வாங்குவதற்காக ஏதாவது செய்வாரா? என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது திடீரென ஜீவா கேரக்டரில் நடித்த அட்சய பாரதி மற்றும் ஸ்ருதி கேரக்டரில் நடித்த ப்ரீத்தா ரெட்டி ஆகிய இருவரும் சேர்ந்து ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி உள்ளது.

விரைவில் வெளியாக இருக்கும் ’அரண்மனை 4’ படத்தில் இடம் பெற்ற தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆடும் பாடலுக்கு அட்சய பாரதி மற்றும் ப்ரீத்தா ரெட்டி ஆகிய இருவரும் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் இந்த வீடியோவுக்கு லைக்ஸ் கமெண்ட் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மனோஜை ஏமாற்றி சென்ற ஜீவாவுடன் அண்ணாமலை குடும்பத்தின் மருமகள்களில் ஒருவர் ரோகிணி எதிரியாக இருக்கும் போது இன்னொரு மருமகள்  ஸ்ருதி உடன் சேர்ந்து ஆட்டம் போடுவது சரிதானா? ரோகிணி இதை பார்த்தால் கோபித்து கொள்ள மாட்டாரா? என ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement