• Jan 19 2025

சன் டிவி சீரியலில் கமிட்டான சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி! பாப்புலர் ஆனதும் தாவிட்டாங்களே!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில்  ரோகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வந்தால் சல்மா அருண். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடித்து குழந்தை ஒன்று உள்ளது.

விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நகரப் பகுதிகளில் மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் வாழும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.

இந்த சீரியலில் அதிகமாக பேசப்படும் ஒரு கேரக்டராக இருப்பவர் தான் ரோகிணி. அவர் குறித்த அதிகமான தகவல்களை இணையத்தில் ரசிகர்கள் தேடி வருகின்றார்கள். அந்த அளவுக்கு இவரின் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.


ரோகிணியாக நடித்துக் கொண்டிருக்கும் இவரின் நிஜ பெயர் சல்மா அருண். இவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். மேலும் சென்னையில் பிறந்து வளர்ந்துள்ளார். ஆரம்பத்தில் மாடலிங் செய்து வந்த இவருக்கு அதன் பின்பு சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.


இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலமானதை தொடர்ந்து அவர் வழங்கிய பேட்டியில், தான் சன் டிவியில் சீரியலில் நடிப்பதற்கும் கமிட்டாகி உள்ளதாக தகவல் ஒன்றை சொல்லியுள்ளார்.

அதாவது, தான் நெகட்டிவ் ரோலில் நடிப்பதால் எனக்கு தொடர்ந்து நெகட்டிவ் ரோலில் நடிப்பதற்கு தான் சீரியல்கள் வருகின்றன. ஆனாலும் தற்போது சன் டிவி சீரியல் ஒன்றில் கமிட்டாகி உள்ளேன். அது ஓரளவுக்கு பாசிட்டிவான கதாபாத்திரமாக உள்ளது என  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement