• Jan 19 2025

நடிகர் தனுஷ் ரேஞ்சுக்கு மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்! வைரல் போட்டோஸ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் சரவணன் விக்ரம். இதைத் தொடர்ந்து அவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு பற்றி இருந்தார்.

இவ்வாறு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்குபற்றிய போட்டியாளர்களுள் சரவணன் விக்ரம் மட்டும் தனது உணர்ச்சிகளை வெளிக் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டது.

அதாவது அந்த வீட்டில் கோபம், சண்டை, பொறாமை, சிரிப்பு என தமது இயல்புகளை அனைவரும் வெளிக்காட்டி வந்த நிலையில், சரவணன் மட்டும் எதையுமே வெளிக் காட்டாமல் சமாளித்து செல்வது போல் இருந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தார்கள்.

மேலும் அவர் பிக் பாஸ் வீட்டில் மிக்சர் சாப்பிட்டு கொண்டு இருந்ததால் அவருக்கு மிக்ஸர் எனவும் கேலி செய்யத் தொடங்கினார்கள். இவரை ரசிகர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் தலைவரும் கிண்டல் செய்திருந்தார்.


இதைத்தொடர்ந்து நான் தான் பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் என தன்னைத்தானே அவர் பெருமை பேசி வந்தார். ஆனாலும் அவர் இறுதிவரை செல்லாமல் வெளியேறியிருந்தார்.

அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன் தொடர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழமையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது தர லோக்கல் ரேஞ்சில் சேர்ட் சரத்துடன் சரவணன் விக்ரம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

குறித்த புகைப்படங்களை பார்க்கும் போது அவை மீன் பிடிக்கும் கடற்கரை சம்பந்தப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்டது போல தெரிகின்றது. மேலும் அவரின் கெட்டப்பை பார்க்கும் போது தனுஷ் நடித்த மரியான் படம் போல இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதான் குறித்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement