• Apr 09 2026

மீனா போற போக்கே சரியில்ல.. புதுசா காதல் கேட்குதோ..!! பொண்டாட்டிய வேடிக்கை பார்க்கும் முத்து

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாகி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக காணப்படுகிறது.

இந்த சீரியலில் கதாநாயகனாக முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் நடிக்க, கதாநாயகியாக மீனா கேரக்டரில் கோமதி பிரியா நடித்து வருகிறார்.

கோமதி பிரியா தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற சீரியல்களிலும்  நடித்து வருகிறார். அத்துடன் சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள ரீ மேக்கிலும் இவர் நடித்துவரும் நிலையில், அந்த சீரியலும் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள், ரிலீஸ் என்பவற்றையும் கோமதி பிரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டு வருவார்.


இந்த நிலையில், தற்போது மலையாள நடிகருடன் பஸ்ஸில் செல்லும் ரீல்ஸ்  ஒன்றை கோமதி பிரியா வெளியிட்டுள்ளார்.

தமிழில் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு இருக்கும் நிலையில், அவர்கள் முத்து உடன் சேர்ந்து ரீல்ஸ் செய்யுமாறு அடிக்கடி பதிவிடுவார்கள். ஆனாலும் அவர் தற்போது மலையாள நடிகருடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.


அண்மையில் தான் மலையாள நடிகருடன் ரீல்ஸ் வெளியிட்ட மீனாவுக்கு தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் பண்ணி இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது அவர்களது ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதேவேளை, குறித்த சீரியலில் மலையாள நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ள கோமதி பிரியா, இந்த வீடியோவில் காதல் பாட்டு கேட்டுக் கொண்டு பயணிப்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement