• May 13 2025

சமந்தா பர்த்டேக்கு விக்னேஷ் சிவன் செய்த காரியம்! தீயாய் பரவும் வைரல் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

2022 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா என தமிழ் திரைத்  நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த காதல் மற்றும் நகைச்சுவையான திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இந்த படத்தினை லலித் குமார் தயாரிக்க, விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் தயாரித்து உள்ளார்கள். மேலும் இதற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

இவ்வாறு தமிழ் ரசிகர்கள் குடும்பங்களோடு கொண்டாடும் வண்ணத்தில் நகைச்சுவை கலந்த ஒரு காதல் படமாக காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இருந்ததோடு, அந்த படம் 'கண்மணி ராம்போ கதீஜா' என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.


இந்த நிலையில், இன்றைய தினம் நடிகை சமந்தா தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு வாழ்த்து கூறும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். 


தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருவதோடு நடிகை சமந்தாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இதோ அந்த வீடியோ,



Advertisement

Advertisement