• Jan 18 2025

இந்த ஒரு சீனுக்காக இப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்தார்களா? அடி தூள் கிளப்பிய சீரியல் ஹீரோயின்ஸ் வீடியோ

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மாரிமுத்து நடிக்கும் போது டிஆர்பி ரேட்டிங்கில்  நம்பர் ஒன் இடத்தில் காணப்பட்டது. ஆனாலும் அவரது மறைவுக்கு  பிறகு படு மோசமான சரிவை சந்தித்தது.

இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலின் கதைக்களம் மாறியதோடு, மாரிமுத்துவுக்கு பதிலாக வேலராமமூர்த்தி நடிக்க என்ட்ரி ஆனார். ஆனாலும் அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவே சில காலம் எடுத்துக் கொண்டது. தற்போது விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பது போல விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது இந்த சீரியல்.

இதில் தர்ஷினி கடத்தப்பட்டதன் பின்பு, தற்போது அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார் குணசேகரன். இதை தடுப்பதற்காக குணசேகரன் வீட்டு மருமகள் ஒன்றாக திகழ்ந்து எதிர்க்கிறார்கள்.


இந்த நிலையில் தற்போது தர்ஷினியின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக குணசேகரன் வீட்டு மருமகள்கள் பூட்டப்பட்ட கதவிற்கு மேலே ஏறி குதித்து மண்டபத்துக்கு உள்ளே சென்ற காட்சிகள் எபிசோடில் ஒளிபரப்பானது. தற்போது அந்த காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.


அதாவது ஜனனி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா ஆகியோர் ஒன்றாகத் திரண்டு தர்ஷினியின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக சென்ற நிலையில், அங்கிருந்த ரவுடிகள் மண்டபத்தின் கேட்டை பூட்டி வைத்துள்ளார்கள். இதனால் அவர்கள் பின்வாங்காமல் கேட்டின் மேலே ஏறிக் குதித்து ரவுடிகளை விரட்டி அடித்து உள்ளே சென்றார்கள். 

தற்போது அவர்கள் அதன் மேல் ஏறி இறங்கி எடுத்த ரிஸ்க்கை  வீடியோவாக வெளியீட்டுள்ளார்கள். குறித்த வீடியோ  வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement