• May 02 2026

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அமிதாப்பச்சன்..

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் தான் கல்கி 2898 ஏடி. 

இந்த படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திசா பதானி, பசுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றார்கள்.

கல்கி படத்தில் பைரவா என்ற கேரக்டரில் பிரபாஸ் நடித்து வரும் நிலையில், அஸ்வத்தாமா கேரக்டரில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இதனால் கல்கி கேரக்டரில் கமல் தான் நடிப்பாரோ என எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


இந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 ஏடி திரைப்படம், எதிர்வரும் ஜூன் 27ம் திகதி வெளியாகும் என சற்றுமுன் அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் சிறப்பு தோற்றத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன்  மற்றும் அமிதாப் பச்சன் காணப்படுகிறார்கள். மேலும், கமல் நடித்த இந்தியன் 2 படமும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதோ வெளியான போஸ்டர்.


Advertisement

Advertisement