• May 14 2025

காலைல 8 மணிக்கு சன் டிவி பாருங்க.. உங்கள ஏமாற்ற மாட்டேன்! எமோஷனலாக பேசிய வெங்கடேஷ் பட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் ஆரம்பமாகும் நேரத்தில் திடீரென வெங்கடேஷ் பட், இயக்குனர், தயாரிப்பாளர்  ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர்.

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அடுத்த சீசன் நடக்குமா? இல்லையா? என்ற குழப்பம் காணப்பட்டது. 

இதை தொடர்ந்து சிங்கம் சிங்கிளா தான் வரும் என அடிக்கடி இன்ஸ்டா வீடியோக்களை வெளியிட்டு வந்தார் வெங்கடேஷ் பட். 


விஜய் டிவியில் நேற்றைய தினம் கோலாகலமாக குக் வித் கோமாளி சீசன் 5 ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ரக்சன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்க, புகழ், குரேஷி, சரத் மற்றும் சுனிதாஆகியோருடன் புதிய கோமாளிகளாக ராமர், கேபிஒய் வினோத், நாஞ்சில் விஜயன், அன்ஷிதா, வைஷாலி உள்ளிட்டோர் அறிமுகமாகி உள்ளனர்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் வெங்கடேஷ் பட்.

அதன்படி அவர் அதில் கூறுகையில். ரசிகர்கள் என்னை ரொம்ப மிஸ் பண்ணுறாங்க. நிறைய மெசேஜ் குவிந்து இருக்கு. நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். இன்னையில் இருந்து காலைல 8 மணிக்கு சன் டிவி பாருங்க என தெரிவித்து உள்ளார். இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement