• Jan 19 2025

வட்டியோடு திரும்ப கிடைத்த பல லட்சங்கள்.. அப்செட்டான மனோஜ்! கிரிமினல் ஐடியா கொடுத்த ரோகிணி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், போலீஸ் ஜீவாவின் வக்கீலிடம் அவர் கிட்ட பேசி புரிய வைங்க என்று சொல்ல, வக்கீல் ஜீவாவை தனியா அழைத்துக்கொண்டு நீங்க வசமா மாட்டிக்கிட்டீங்க, தப்பிக்கவே முடியாது. நீங்க காம்ப்ரமைஸா போறது தான் ஒரே வழி என்று சொல்றார்.

ஆனாலும் நான் எதுக்கு பணத்தை கொடுக்கணும் நான் என்ன தப்பு பண்ணினேன் என்று கேட்க, அவங்க கிட்ட பேசுற மாதிரி என்கிட்ட பேசாதீங்க நீங்க என்ன பண்ணுனீங்கன்னு எல்லாமே எனக்கு தெரியும். பணம் கொடுக்கலைன்னா உங்க பாஸ்போர்ட் லாக் ஆகிடும். நீங்க கனடா போக முடியாது. நீங்க ஜெயிலுக்கு தான் போகணும் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் பணத்தை கொடுக்க ஒப்புக்கொள்கிறார் ஜீவா.

மறுபக்கம் வண்டி கிடைக்குமா கிடைக்காதா என மீனா முத்திடம் கேட்டுக் கொண்டிருக்க , கொஞ்சம் அமைதியா இரு தப்பு நம்ம பேர்ல இருக்குது பொறுத்திருக்க வேண்டும் என்று முத்து சொல்கிறார்.


நாங்கள் பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று ஜீவா சொல்ல, ரோகிணி 27 லட்சம் கொடுத்தா போதாது இவ்வளவு நாள் அந்த பணத்தை வைத்ததற்கு வட்டியோட சேர்த்து 30 லட்சம் கொடுக்கணும் என்று சொல்ல, ஜீவா அதிர்ச்சி அடைகிறார். ஆனால் ஓகே என்று சொல்லி டாக்குமன்டை ரெடி பண்ண சொல்லுகிறார்.

தொடர்ந்து நாங்கள் சமரசமா போறோம். இனி எங்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கையெழுத்து போடச் சொல்ல, மனோஜ் கையெழுத்து போட போக ரோகிணி  தடுத்து இன்னும் பணம் வரலையே என கேட்க, ஜீவா அந்த பணத்தை உடனே அனுப்பி வைக்கிறார், இதனால் மனோஜ் கையெழுத்து போடுகிறார்.

ஆனால் ஜீவாவுக்கு கையெழுத்து போட யாரும் இல்லை என்று கான்ஸ்டபிள் அவரை வெளியே கூட்டி வர அங்கு முத்து நிற்கிறார். கான்ஸ்டபிள் முத்துவிடம் இந்த பொண்ணுக்கு ஒரு கையெழுத்து போடணும் என்று சொல்ல, ஜீவாவும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார் என்று கேட்கிறார். அதனால் அவர் என்ன எது என்று விசாரிக்காமலேயே கையெழுத்து போட்டு கொடுக்கிறார்.


அதன் பின் ட்ராபிக் போலீஸ் பார்க்க அவர் இருந்த ரூமுக்குள் முத்து செல்ல, மனோஜூம் ரோகிணியும் பணத்துடன் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்து விடுகிறார்கள்.

மனோஜ் வீட்டுக்கு போனதும் அப்பாட பணம் எங்கேயும் போகல திரும்பி வந்துவிட்டது என்று சொல்லி இந்த 27 லட்சத்தையும் முத்து முகத்துல தூக்கி வீசணும் என்று சொல்ல, உனக்கு அறிவில்லையா என்று ரோகினி திட்டுகிறார். முதல் கனடா போற வேலைய பாரு என அந்த ஏஜென்சிக்கு போகின்றார்கள்.

ஆனாலும் அந்த வேலைக்கு வேற ஒரு ஆளை எடுத்தாச்சு இனி கனடா போக முடியாது அதோட இந்த வருஷத்தோட அவருடைய வயசும் சரியாகிவிடும் என்று சொல்ல, மனோஜ் அதிர்ச்சியாகிறார். இதனால் அவர் அப்செட்டாக இருக்க, கவலைப்படாத இந்த பணத்தை வைத்து ஏதாவது பிசினஸ் பண்ணலாம் என்று ரோகிணி ஐடியா கொடுக்கிறார்.

மேலும்  27 லட்சம் வந்துச்சு என்று சொல்ல வேண்டாம். அதேபோல ஜீவா கிட்ட பணம் வந்தது என்றும் சொல்ல வேண்டாம். எங்க அப்பா 15 லட்சம் அனுப்பினார் என்று மட்டும் சொல்லு, என்று ரோகிணி சொல்ல, அவர் தான் ஜெயில்ல இருக்காரே, அப்படி இருக்கும்போது எப்படி அனுப்புவானு கேட்பார்களே என்று கேட்க, அதை நம்புற மாதிரி சொல்லணும் நீ வாய் திறக்காத நான் பேசுறன் என்று சொல்லி அழைத்து வருகிறார் ரோகினி இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement