• Jan 19 2025

காதலை சொன்ன பழனி.. தலையில் மல்லிப்பூ வைத்த பாக்கியா! அசிங்கப்பட போகும் கோபி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ராதிகா கர்ப்பமா இருக்கும் விஷயத்தை பாக்கியாவிடம் சொல்ல, தனக்கும் கோபிக்கும் இடையே நடைபெற்ற விஷயங்களை நினைத்து பார்க்கிறார் பாக்யா.

துணியை காய போட்டு விட்டு பாக்கியா கீழே வர ராதிகா அவரை தடுத்து நிறுத்தி, நீங்க கேட்டதும் நான் கர்ப்பம் என்று சொல்லிட்டேன். இதனால் உங்களுக்கு ஒன்றும் சங்கடம் இல்லையே என்று கேட்க, நான் எதுக்கு கவலைப்படணும் அவர் உங்களை கல்யாணம் பண்ணிக்காட்டாரு. நீங்க கர்ப்பமா இருக்கீங்க. வாழ்த்துக்கள்.. ஹெல்தியா சாப்பிடுங்க.. உடம்ப பாத்துக்கோங்க என்று  சொல்ல, இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம் நாங்களே டைம் பார்த்து சொல்றோம் என்று ராதிகா சொல்லுகிறார்.

அதன்பின் மனதிற்குள் பாக்கியா புலம்பிக் கொண்டிருக்க செழியன், எழில், நிலா பாப்பா ஆகியோர் பாக்கியவை  சுற்றி விளையாடி அவரது கவலையை மறக்க வைக்கின்றார்கள். மேலும் பசங்க எல்லாம் இவ்வளவு பெருசா வளர்ந்து குழந்தையோடு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் அவர் தனக்கு குழந்தை பிறக்க எப்படி சொல்லுவாரு, அக்கம் பக்கத்தில் என்ன பேசுவாங்க பசங்களுக்கு கிண்டல் பண்ணுவாங்களே என்று நினைத்து கவலைப்படுகிறார்.


அதன் பின்பு பாக்கியா ரெஸ்டாரண்ட்ல இருக்க பழனிச்சாமி அங்கு பூக் கூடையுடன்  வருகிறார். அங்கு எதுக்கு இவ்வளவு பூ எடுத்துட்டு வந்து இருக்கீங்க என்று கேட்க, என் பிரண்டு பூக்கடை பிசினஸ் பண்றான். நிறைய பூ இருக்குன்னு ரெண்டு கூட பூவ கொடுத்து அனுப்பினான். அதுல   ஒரு கூடையை வீட்டில் வைத்துவிட்டு உங்களுக்கு ஒரு குடைய கொண்டு வந்தேன் என்று பழனி சொல்லுகிறார்.

மேலும் சாமி  போட்டோக்கள் எல்லாத்துக்கும் பூ போடுங்க என்று சொல்ல, ஏன் சாமி போட்டோவுக்கு மட்டும் தான் போடணும் நான் வைக்க கூடாதா என்று மல்லிகை பூவை எடுத்து தலையில் வைக்கிறார் பாக்கியா. அதனை பார்த்து ரசிக்கிறார் பழனிச்சாமி.

காபி குடிக்கிறீங்களா என்று கேட்கவும் அதெல்லாம் வேண்டாம் என்று வெளியே வந்து நின்றபடி பாக்யாவை ரசித்து வீட்டிற்கு வருகிறார்.  அங்கு அவர் கையில் உடுப்புகளை கொண்டு வர அதனை அவரது அம்மாவும் அக்காவும் வாங்கி பார்த்து இப்படி எல்லாம் போட மாட்டியே என்று கேட்க, இப்ப இப்படித்தான் போடத் தோணுது என்று பழனி சொல்லுகிறார்.


மேலும் பாக்கியாவின் நட்பு இப்ப காதலா மாறிவிட்டது என்று சொல்லி அவங்களுக்கும் என் மேல் ஒரு இது இருக்கும் என நினைக்கிறேன் என்று பழனி சொல்கிறார். அதற்கு உடனே பழனியின் அக்கா பாக்யாவை பார்த்து கதைச்சுட்டு கல்யாணம் தேதி குறிக்க வா என்று கேட்க, அதெல்லாம் இப்ப வேண்டாம் கொஞ்ச நாள் ஆகட்டும் என்று சொல்லி எடுத்து வந்த டிசேர்ட் போட்டு வந்து காட்ட அவரது அம்மா அடையாளமே தெரியலையே என்று ஆச்சரியப்படுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement