• Jan 18 2025

நான் ரொம்ப சுயநலவாதி, விக்ரமுக்கு அடிபட்டால் கூட ஒன்மோர் போலாம்ன்னு சொல்வேன்- உண்மையை உடைத்த பா.ரஞ்சித்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக இருப்பவர் தான் பா.ரஞ்சித். இவரது இயக்கத்தில் தற்பொழுது தங்கலான் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தை  ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

 பழங்குடியின மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக அழுத்தமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


இந்நிலையில் இந்த டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், எனக்கு ரொம்ப பிடித்தமான நடிகர் விக்ரம். பொதுவாக படம் ஆரம்பிக்கும் போது இப்படித்தான் இருக்க வேண்டும் என ஹீரோக்களிடம் வரைந்து கொடுப்போம். அப்படித்தான் தங்கலானுக்காக வரைந்து கொடுத்தேன். இதனையடுத்து ஸ்பாட்டில் அதே மாதிரியான ஆளாக வந்து நின்றார் விக்ரம்.

 நான் சினிமா எடுக்கும் போது ரொம்ப சுயநலவாதி.தங்கலானுக்காக அவர் எனக்கு ஒரு சண்டைக்காட்சி செய்து கொடுக்க வேண்டியது இருந்தது. படப்பிடிப்பில் எவ்வளவு சீரியஸாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டி கொள்ளாமல், ரொம்ப கூலாக காட்டி கொள்வேன். ஆனாலும் நான் நினைத்த காட்சி வரும் வரை விட மாட்டேன். 


விக்ரம் சார் நடிக்கும் போது அவரை பார்க்கவே மாட்டேன். மானிட்டரை மட்டுமே பார்ப்பேன். அவருக்கு ஏதாவது அடிப்பட்டாலும் கூட வலி இருக்கா சாருன்னு கேட்டு ஒன்மோர் போலாம்ன்னு சொல்வேன். அந்த அளவு சினிமா எடுக்கும் போது நான் சுயநலவாதி என தெரிவித்துள்ளார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement