• Jan 18 2025

நடிகை ரெஜினாவுக்கும் திருமணமா? அடுத்தடுத்து திருமணத்தில் இணையும் பிரபல நடிகைகள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ரெஜினா. மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 

இவர் சிவா மனசுலோ ஸ்ருதி என்ற தெலுங்கு படத்தில் நடித்தமைக்காக 2012ம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார். மேலும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பால் கவரப்படாமல் யாருமே இருக்க முடியாது.

இவர் நடித்து வெளி வந்த அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம் என்ற படங்கள் நல்ல வெற்றி கண்டது. 



கடந்த ஆண்டு இவர் நடித்த கருங்காப்பியம், காஞ்சுரிங் கண்ணப்பா, போன்ற படங்களில் இவர் நடித்த கதாபாத்திரம் பாராட்டுக்களை பெற்றது. 

இந்த நிலையில், நடிகை ரெஜினா கசாண்ட்ராவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவலொன்று தீயாக பரவி வருகிறது.



அதாவது, 33 வயதை எட்டிய நடிகை ரெஜினா, பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

எனினும் ரெஜினா தரப்பில் இருந்து இதுவரையில், அதிகார்வபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ஆனால் கிட்ட தட்ட இந்த திருமண தகவல் உறுதியானது என சினிமா வட்டாரத்தில் கூறப்படுவதால் இந்த ஆண்டு ரெஜினியா திருமணத்தை உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


Advertisement

Advertisement