• Jan 19 2025

என் வாழ்க்கை முட்களின் வலியால் நிறைந்தது.. அம்பானி பையனா இருந்தாலும் அத்தனையும் கிடைச்சிடாது! தேம்பி அழுத முகேஷ் அம்பானி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திருமணத்திற்கு முந்திய விழா குஜராத்தில் மார்ச் முதலாம் திகதி முதல் நடைபெற்ற வருகிறது. ஜாம் நகரில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று உள்ளார்கள்.

இந்த நிலையில், ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் முன்னிலையில் நேற்றைய தினம் உரையாற்றியுள்ளார். இதன் போது அவர் கூறுகையில்,


எனக்காக என்னுடைய குடும்பத்தினர் பல்வேறு விஷயங்களை செய்துள்ளார்கள். என்னுடைய வாழ்க்கை ரோஜா மலர் படுக்கையால் ஆனது அல்ல. முட்களின் வலியை நானும் அனுபவித்துள்ளேன். சிறுவயதிலிருந்தே உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்துள்ளேன். என்னுடைய அப்பாவும் அம்மா ஒரு நாளும் என்னை கைவிடவில்லை. எப்போதும் எனக்கு முழு ஆதரவு அளித்தார்கள் என உருக்கமாக பேசி உள்ளார்.


இவ்வாறு ஆனந்த் அம்பானியின் பேச்சைக் கேட்டு முகேஷ் அம்பானி, தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுள்ளார். அவர் தேம்பி தேம்பி அழுத காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.




Advertisement

Advertisement