கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2 ’மற்றும் பார்த்திபன் நடித்த ’டீன்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் இன்றுடன் கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் தூக்க இருப்பதாகவும் ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே திரையிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை தனுஷின் ’ராயன்’ திரைப்படம் வெளியாக இருப்பதை அடுத்து அனைத்து தியேட்டர்களிலும் அந்த படத்தை திரையிட திட்டமிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியானது என்பதும் அதே தேதியில் தான் பார்த்திபனின் ’டீன்ஸ்’ திரைப்படமும் வெளியானது என்பது தெரிந்தது.
’இந்தியன் 2’ திரைப்படம் முதல் நாளில் மட்டும் ஓரளவு வசூல் செய்த நிலையில் அடுத்த நாளே நெகட்டிவ் விமர்சனம் காரணமாக கூட்டம் குறைந்து விட்டது என்பதும் அதனால் அந்த படம் மிகப்பெரிய நஷ்டம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
அதேபோல் ’டீன்ஸ்’ திரைப்படத்திற்கும் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும் அது சின்ன பட்ஜெட் படம் என்பதால் தப்பித்து விட்டது என்றும் சிறிய அளவில் அந்த படத்திற்கு லாபம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் கடந்த சில நாட்களாக ’இந்தியன் 2’ மற்றும் ’டீன்ஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்குமே கூட்டமில்லாமல் 50 முதல் 100 ஆடியன்ஸ்களை வைத்து மட்டுமே திரையிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றுடன் ’இந்தியன் 2’ மற்றும் ’டீன்ஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் துக்கப்பட இருப்பதாகவும் நாளை முதல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ’ராயன்’ திரைப்படம் திரையிட போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ’ராயன்’ திரைப்படத்திற்கு நல்ல முன்பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Listen News!