தமிழ் சினிமாவில் வைகை புயல் வடிவேலுக்கு என்று தனி மரியாதை காணப்படுகின்றது. இவரது காமெடிக்கு மயங்கி சிரிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் புகழின் உச்சியிலே காணப்பட்டவர் தான் நடிகர் வடிவேலு.
நடிகர் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் தான் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இந்த படத்தை இயக்குனர் சிம்பு தேவன் இயக்கியிருந்தார். இதனை சங்கர் தயாரித்திருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதை தொடர்ந்து இயக்குனர் சிம்பு தேவு, சங்கர் தயாரிப்பில் வடிவேலுவின் இன்னும் ஒரு படம் உருவாக உள்ளதாக பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் அதற்கு இடையில் வடிவேலுவுக்கும் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளால் தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் சங்கர் முற்றுகை இட்டார். அதன்பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வடிவேலு படங்களில் பெரிதாக நடிக்காமல் முடங்கி கிடந்தார்.
இந்த நிலையில், சிம்பு தேவன் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலு பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்திற்கு பிறகு வடிவேலுவை வைத்து இன்னொரு படம் செய்வதற்காக திட்டமிட்டு இருந்தோம். கதையை தயார் செய்து சங்கர் சாரிடம் கொடுத்து விட்டேன். ஆனால் அந்தப் படத்தின் கதையை ஒரு சில காரணங்களால் முடிக்க முடியவில்லை. அதற்கு முன் அறை எண் 305ல் கடவுள் படத்தை எடுத்து விடலாம் என எடுத்துவிட்டேன்.
இந்த படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் மர்ம வேதாளம். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நான் திரும்பவும் அந்த கதையை எடுக்கலாம் என நினைத்தபோது திரும்பும் திசையெல்லாம் பேய் படங்களாகவே காணப்பட்டது. இந்தப் படமும் அவ்வாறான கதை என்பதால் அந்த படத்தை தொடவே இல்லை. இந்த படத்தில் தான் வடிவேல் நடிப்பதாக இருந்தது எனக் கூறியுள்ளார்.
அதாவது தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 6,7 ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்து பேய் படங்களாகவே வெளிவந்து கொண்டிருந்தது. இளம் நடிகர்கள் முதல் வளர்ந்து வரும் நடிகர்கள் வரை பலர் பேய் படங்களில் நடித்தார்கள். இதில் ஒரு சிலர் வெற்றி பெற்றனர். அதிலும் சந்தானம் பேய் படத்தினை முழுக்க முழுக்க காமெடி கதை களமாகி மாற்றி இப்போது வரை பல பெயர்களில் எடுத்துக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!